நீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் ஓட நடவடிக்கை – அசோக்குமார் உறுதி

1081

பேராவூரணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடும் அசோக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார், அப்போது அவர் பேசும் போது பேராவூரணியில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடாத நீலகண்ட பிள்ளையார் கோவில் தேர் விரைவில் தேர் இழுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும்,கோர்ட் மற்றும் உயர் அலுவலகங்கள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார், வேட்பாளருடன் நிர்வாகிகள் அப்துல் மஜித், அன்பழகன்,தனம் நீலகண்டன், அருள்நம்பி உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்