தமிழகத்தில் நடைபெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேட்பாளர்கள் தங்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்து வருகின்றனர் அதைப்போல் தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி மற்றும் தேமுதிக வேட்பாளர் டாக்டர் ராமநாதன் ஆகியோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் தஞ்சை ஆற்றுப் பாலம் அருகில் உள்ள பள்ளிவாசலில் வேட்பாளர்கள் இருவரும் வாக்கு சேகரிக்க வந்தனர் அப்போது அதிமுக வேட்பாளரும் தேமுதிக வேட்பாளரும் ஒருவருக்கொருவர் சால்வை அணிவித்து கொண்டு தங்களது நட்பை பரிமாறிக் கொண்டனர் பின்னர் எந்த வித ஆரவாரமும் இன்றி தொழுகைக்கு வந்த முஸ்லிம்களிடம் தங்களுக்கு வாக்கு அளிக்க கோரி துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். அப்போது அதிமுக முன்னாள் மேயர் சாவித்திரி கோபால், பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்