தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது -திமுக காங்கிரஸ் கூட்டணி

947

தஞ்சாவூர் மாவட்டம் பூதலூரில் பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு ஆதரவாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பிரசாரம் செய்தார் அப்போது தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது திமுக –  காங்கிரஸ் கூட்டணி என்றும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மன்னர்களின் ஆட்சி போல  குடும்ப ஆட்சியை காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலும், கொல்கத்தா முதல் மும்பை வரையிலும் பரந்த முடியாட்சியை நடத்தி வந்தது. திமுகவும் காங்கிரசும் 2ஜி அலைக்கற்றை ஊழலை செய்தது. இந்த வரிசையில் இரண்டாவது தலைமுறை, மூன்றாவது தலைமுறை, நான்காவது தலைமுறை என ஊழல் அரசியலை வழிவழியாகச் செய்து வருகின்றன. காங்கிரஸ்-திமுக கூட்டணி தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காதது என்று தெரிவித்தார் இப்பிரசாரத்தின் மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் நிர்வாகிகள் பண்ணவயல் இளங்கோ புரட்சி கவிதாசன் ஜெய்சதிஷ் முரளி கதிரவன் கென்னடி மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி எம்ஜிஎம் சுப்ரமணியம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்