தஞ்சை தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தஞ்சை பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் இந்நிலையில் தஞ்சாவூர் சோழிய வெள்ளாளர் சங்கம் சார்பில் அதிமுக அரசு தஞ்சாவூரில் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்து அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்,இதில் வெள்ளாளர் சங்க நிர்வாகிகள் இளங்கோவன் சந்திரசேகரன் மாணிக்கம் மற்றும் அதிமுக நிர்வாகிகள் புண்ணியமூர்த்தி,பூபதி ஆகியோர் உடன் இருந்தனர், பின்னர் அதனை தொடர்ந்து வேட்பாளர் அறிவுடை நம்பி, முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆகியோர் வடக்குவாசல் சிஆர்சி ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்