தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கும் எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் – பாஜக சி.டி ரவி பேச்சு

910

தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த செங்கிப்பட்டியில் பாஜக மேலிட பார்வையாளர் சி.டி.ரவி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பிரசாரம் செய்தார் அப்போது 2ஜி 3ஜி எனக்கோரி கொள்ளையடிக்கும் கூட்டம் வேண்டுமா? மக்களுக்கு நல்லாட்சி கொடுக்கும் பாஜக வேண்டுமா என்பதை வாக்காளர்கள் முடிவு செய்ய வேண்டும்.இந்தத் தேர்தல் திமுக – காங்கிரஸ் கூட்டணிக்கும், அதிமுக – பாஜக கூட்டணிக்கும் இடையே மட்டும் நடைபெறுவது அல்ல. தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கும், அவரை எதிர்ப்பவர் களுக்கும் இடையே நடைபெறும் தேர்தல் இது. எனவே நாம் அவர்களைத் தோற்கடிக்க வேண்டும். அதற்கு இதுதான் சரியான தருணம்.விவசாய கடன்களைத் தள்ளுபடி செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் நம்முடைய நண்பர்தான். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டைத் தடை செய்தது காங்கிரஸ் அரசுதான் என்று தெரிவித்தார்