தஞ்சை சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடை நம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அவருக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்தி உற்சாக வரவேற்பு அளித்தனர், பிரசாரத்தின் போது பேசிய வேட்பாளர் தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் திட்டத்தில் அய்யங்குளம்,சாமந்தான்குளம் ஆகியவை சீரமைக்கப்பட்டுள்ளது பழைய பேருந்து நிலையம் காமராஜ் மார்கெட் ஆகியவை புதிதாக கட்டப்பட்டு வருகிறது இவையெல்லாம் அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களாகும் என்று தெரிவித்தார், வேட்பாளருடன் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,வார்டு செயலாளர் ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர், அதேபோல் பகுதி செயலாளர் சரவணன் மருத்துவ கல்லூரி பகுதியில் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்