பாஜக வேட்பாளரை ஆதரித்து ஜே.பி.நட்டா பூதலூரில் பிரச்சாரம்

1378

திருவையாறு சட்டமன்ற தொகுதி அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளராக பூண்டி வெங்கடேசன் போட்டியிடுகிறார்,இவரை ஆதரித்து திருவையாற்றில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரசாரம் செய்தார்,இதைத்தொடர்ந்து மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் பிரசாரம் செய்தார்,அதைப்போல் வரும் 26ந்தேதி பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா திருவையாறு தொகுதி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனை ஆதரித்து பூதலூரில் பிரசாரம் செய்ய உள்ளார், இதற்காக மேடை அமைக்கும் பணி,தொடக்க பூஜையும் நடைபெற்றது, இதில் மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ, அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி ஆகியோர் கலந்து கொண்டனர், இந்நிலையில் திருவையாற்றில் பல்வேறு பகுதிகளில் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு சேகரித்து வருகிறார். வேட்பாளருடன் பாஜக மாவட்ட செயலாளர் முரளி,இளைஞரணி கதிரவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்,