அதிமுக ஆட்சி தொடர இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களியுங்கள் – அறிவுடைநம்பி வாக்கு சேகரிப்பு

1188

தஞ்சை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்,தஞ்சை ஒன்றிய பகுதிகளான மாரியம்மன் கோவில், புதுப்பட்டிணம்,கடகடப்பை ஆகிய இடங்களுக்கு சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார், அப்போது பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர், முதலமைச்சர்களாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் இருந்தபோது பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, தமிழுக்கென்று தனி பல்கலைக்கழகம், அதிமுக ஆட்சி காலத்தில்தான் கொண்டு வரப்பட்டது என்று தெரிவித்தார், அதைப்போல் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மேலவீதி, தெற்குவீதி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாக சென்று அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்,மேலும் பகுதி செயலாளர் சரவணன் மருத்துவக்கல்லூரி பகுதி,புதிய பேருந்து நிலையம்,முனிசிபல் காலனி ஆகிய இடங்களில் கட்சி நிர்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.