தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் தாமரை சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார், திருவையாறு கண்டியூர் நடுக்கடை திருப்பந்துருத்தி உள்ளிட்ட இடங்களில் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார் அப்போது திருவையாறு கடைவீதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதால் பைபாஸ் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், திருவையாறு பகுதி ஆன்மீக சுற்றுலா இடமாக மேம்படுத்தப்படும் மேலும் மத்திய அரசு எண்ணற்ற நல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று தெரிவித்தார். இப்பிரசாரத்தின் போது பாஜக நிர்வாகிகள் கதிரவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்