குடும்ப ஆட்சியா ?மக்கள் ஆட்சியா? மத்திய அமைச்சர் கேள்வி

1345

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் பூண்டி வெங்கடேசனுக்கு ஆதரவாக மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் திருவையாற்றில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் அப்போது தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி வேண்டுமா மக்கள் ஆட்சி வேண்டுமா என்றும் இந்த தேர்தல் மக்களுக்கான தேர்தலா குடும்பத்திற்கான தேர்தலா என்று கேள்வி எழுப்பினார் மேலும் டெல்லியில் அதிமுகவின் மூத்த சகோதரனாக செயல்படுகிறோம் எம்ஜிஆரின் கொள்கைகளை ஜெயலலிதா சிறப்பாக செய்தார் அந்த வழியில் தற்போது தமிழக முதல்வர் செயல்பட்டு வருகிறார் என்றும் தமிழகம் திராவிட கலாச்சாரம் அல்ல ஆன்மீக பூமியாக உள்ளது என்றும் மத்திய அரசு தமிழகத்திற்கு எந்த மாநிலத்திற்கும் ஒதுக்காத நிதியை அதிகளவு வழங்கியுள்ளது என்றும் தெரிவித்தார் இக் கூட்டத்தில் வேட்பாளர் பூண்டி வெங்கடேசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஜெய்சதிஷ் கதிரவன் அதிமுக முன்னாள் எம்எல்ஏ ரெத்தினசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்