தஞ்சாவூரில் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரம்

1008

தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், அதன்படி தஞ்சை கீழவாசல்,வடக்குவீதி, மேலவீதி பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார்,முன்னதாக காய்கறி மார்கெட், விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார், தஞ்சாவூர் தொகுதியில் விடுபட்ட பாதாள சாக்கடை திட்டப்பணிகள் தொடரப்படும், ஸ்மார்ட்சிட்டி பணிகள் துரிதப்படுத்தப்படும் என்றும் அதிமுக ஆட்சியில் தான் பெயர் சொல்லும் வகையில் திட்டப்பணிகள் தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது என்று தெரிவித்தார், இப்பிரச்சாரத்தின்போது முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,பகுதி செயலாளர் மெடிக்கல் சரவணன்,ரமேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.