அனைத்து திட்டங்களும் அதிமுகதான் அதிமுக வேட்பாளர் அறிவுடைநம்பி பிரசாரம்

1017


தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் அறிவுடைநம்பி தீவிர பிரச்சாரத்தை தொடங்கினார், தஞ்சை பள்ளியக்ரஹாரம் பகுதியிலிருந்து 5 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளான வெண்ணாற்றங்கரை,சுங்காந்திடல்,செல்ல பிள்ளையார்கோவில் தெரு, கீரைகாரத்தெரு, குதிரைகட்டிதெரு,கரந்தை ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்து பிரசாரம் மேற்கொண்டார், அப்போது அதிமுக ஆட்சியில்தான் தஞ்சாவூருக்கு உலகத்தமிழ் மாநாடு, சுற்றுசாலை வசதி,மின்விளக்கு வசதி, புதிய பேருந்து நிலையம், தொல்காப்பியர் சதுக்கம், மணிமண்டபம்,புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம், பல்நோக்கு மருத்துவமனை ஆகிய திட்டங்கள் அனைத்துமே அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டது என்று தெரிவித்தார், இப்பிரச்சாரத்தின்போது முன்னாள் மேயர் சாவித்திரி கோபால்,பகுதி செயலாளர் மெடிக்கல் சரவணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.