தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளில் பேராவூரணியும் ஒன்றாகும், இந்த தொகுதி தஞ்சை மாவட்டத்தின் கடைமடை பகுதியில் உள்ளது, நடை பெற இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக முன்னாள் பேரூராட்சி பெருந்தலைவர் அசோக்குமாரும் அதிமுக வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ திருஞானசம்பந்தமும் போட்டியிடுகின்றனர், இந்நிலையில் திமுக வேட்பாளர் அசோக்குமார் தனது வேட்பு மனுவை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் தாக்கல் செய்தார், பின்னர் அவர் கூறும்போது பேராவூரணி தொகுதியில் அனைத்து வசதிகளும் செய்யப்படும் குறிப்பாக பாலிடெக்னிக், கோர்ட், துறைமுகம், தடுப்பணைகள் கட்டப்படும் என்று உறுதி அளித்தார் இதில் மாவட்ட செயலாளர் ஏனாதி பாலு,சேகர், ராஜரத்தினம்,அப்துல் மஜித், நீலகண்டன், முத்துவேல் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்