பாரம்பரிய நெல் அறுவடையில் அசத்தும் மாணவியர்

1436

தஞ்சாவூர் மாவட்டம் குருவாடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அன்புச் செல்வம் இயற்கை வேளாண் விவசாயி,இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இயற்கை முறையில் பாரம்பரிய நெல் ரகமான பூங்கார்,மாப்பிள்ளை சம்பா,கருப்பு கவுனி,காட்டு யானம்,கொத்தமல்லி சம்பா,சீரக சம்பா உள்ளிட்ட 24 வகையான நெல் ரகங்களை சாகுபடி செய்து வருகிறார். இந்நிலையில் தஞ்சை செங்கிபட்டியில் உள்ள தனியார் வேளாண் கல்லுாரி மாணவிகள் இயற்கை விவசாயம் குறித்து கேட்டறிந்து குருவாடிப்பட்டி கிராமத்திற்கு வந்து பாரம்பரிய நெல் சாகுபடி குறித்தும், இயற்கை முறையில் உரம் தயாரிப்பு குறித்தும் பாரம்பரிய நெல்லின் சிறப்பையும் கேட்ட மாணவிகள் வயலில் அறுவடைக்கு தயாராக இருந்த மாப்பிள்ளை சம்பா நெல் ரகத்தை அறுவடை செய்து கொடுத்து விவசாயிக்கு உதவி செய்தனர், இதுகுறித்து மாணவியர்கள் கூறும்போது தாங்கள் கிராமங்களில் தங்கி விவசாயிகளின் அனுபவங்கள்,சாகுபடி யுக்திகள் மற்றும் இயற்கை வேளாண் சாகுபடி முறை ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடிகிறது என்று தெரிவித்தனர்