தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் சுடுமண் கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி நடைபெற்று வருகிறது,கைவினைப் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் பூம்புகார் நிறுவனம் பல பகுதிகளில் கண்காட்சிகளை நடத்தி வருகிறது அதைப் போல் தஞ்சை புதிய பேருந்து நிலையம் (ஆலமரம் ஸ்டாப்) பூம்புகார் விற்பனை நிலையத்தில் பாரம்பரிய கைவினைப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் விதமாக சுடுமண்ணால் ஆன கைவினைப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெற்று வருகிறது இக்கண்காட்சியில் சுடுமண்ணால் ஆன துளசி மாடம் உண்டியல் தண்ணீர் குடுவை வாஸ்து உருளி பூந்தொட்டி காய்கறி பழங்கள் மண் சிலைகள் மண்பானைகள் சொப்பு செட் பொம்மைகள் விநாயகர் உருவங்கள் மற்றும் பலவிதமான வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன இக்கண்காட்சியில் இடம்பெற்றுள்ள கைவினைப் பொருட்களுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது, இக்கண்காட்சி வரும் 28ந் தேதி வரை நடைபெறுகிறது என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் தெரிவித்துள்ளார்