முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 73 வது பிறந்தநாள் விழா

922

தமிழகத்தில் ஐந்து முறை ஆட்சி செய்தும் பல்வேறு திரைப் படங்களில் நடித்து புகழ்பெற்று விளங்கியவர் மறைந்த ஜெயலலிதா அம்மையார்,கட்சியினரால் அம்மா என்று அன்போடு அழைக்கப்பட்டார் அதிமுக பொதுச் செயலாளராக இருந்து கட்சியை வழிநடத்தி வந்தவர் ஜெயலலிதா, இவரது 73வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் இனிப்புகள் வழங்கியும் நலத்திட்ட உதவிகள் வழங்கியும் மற்றும் உருவச் சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தி வருகின்றனர். இதைப்போல் தஞ்சாவூரில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் பேரணியாக வந்து தஞ்சை ரயிலடி பகுதியில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் முழு உருவசிலைக்கு அதிமுகவினர் முன்னாள் எம்பி பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் ஆவின் தலைவர் காந்தி பகுதி செயலாளர்கள் அறிவுடைநம்பி மெடிக்கல் சரவணன் புண்ணிய மூர்த்தி ரமேஷ் அமுதாரவிச்சந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், இதேபோல் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் தெற்கு வீதி பகுதியில் ஜெயலலிதா உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார், பகுதி செயலாளர் சரவணன் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் உணவு வழங்கினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

66 − = 61