தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு

1467

தஞ்சாவூரில் குழந்தையை தூக்கி சென்ற குரங்கு ஒரு குழந்தை பலி  ஒரு குழந்தை மீட்பு,தஞ்சைமூலை அனுமார் கோயில் பகுதியில் வசிப்பவர் ராஜா புவனேஸ்வரி தம்பதியினர், ராஜா பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு  கடந்த எட்டு நாட்களுக்கு முன்பு இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது, இந்நிலையில் இரண்டு  குழந்தைகளையும் தாய் புவனேஸ்வரி தூங்க வைத்துவிட்டு சிறு வேலையாக வெளியே சென்றபோது அப்பகுதியில் உள்ள குரங்குகள்  வீட்டின் ஓட்டை பிரித்து வீட்டினுள் இறங்கி இரண்டு பெண் குழந்தையை தூக்கிச் சென்றுள்ளது, வெளியே சென்று வந்த தாய் குழந்தையை காணாமல் திடுக்கிட்டு தேடிய போது வீட்டின் மேல் சுவற்றில் குரங்கு ஒரு குழந்தையை வைத்திருப்பதை  கண்டு அதிர்ச்சி அடைந்து சத்தமிட்டு அவரது உறவினர்களுடன் ஒரு குழந்தையை மீட்டார், பின்னர் மற்றொரு குழந்தையை தேடிய போது குரங்குகள் மற்றொரு குழந்தையை தூக்கிச் சென்று அருகில் உள்ள அகழியில் போட்டுள்ளது, இந்நிலையில் காணாமல் போன மற்றொரு குழந்தையை உறவினர்கள் தேடி வந்த நிலையில் குழந்தையானது அருகில் உள்ள அகழியில் விழுந்து பலியாகி இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து அகழியில் விழுந்த குழந்தையை மீட்டு தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை கொண்டு சென்றனர்,குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்ததை அடுத்து அக்குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது மேலும் அந்த பகுதியில் சுற்றித் திரியும் குரங்குகளை உடனே வனத்துறையினர் பிடித்து வனப்பகுதிக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்