தஞ்சையில் சசிகலாவின் உறவினர்கள் சுதாகரன் இளவரசி ஆகியோரின் சொத்துக்கள் அரசுடைமை

1138

உச்சநீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கில் கடந்த14.2.2017 அன்று வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சை வஉசி நகர் முதல் தெருவில் கதவு எண் 30ல் 26540 சதுர அடி காலி மனை சொத்துக்களை தமிழக அரசு பறிமுதல் செய்து அரசு சொத்தாக மாற்றியுள்ளது இந்த சொத்துக்கள் சசிகலாவின் உறவினர்களான இளவரசி சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமானது ஆகும் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் வாடகை உட்பட அனைத்தும் அரசுக்கு சொந்தமானது என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார் இந்த சொத்தின் மதிப்பு தற்போது பல கோடி ரூபாய் என இருக்கும் என தெரிய வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

88 − = 87