தஞ்சாவூரில் தேசிய கொடியினை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் ஏற்றி வைத்து மரியாதை

1405

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் குடியரசு தின விழாவில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தேசியக் கொடியினை ஏற்றிமரியாதை செலுத்தினார். தொடர்ந்து வெண்புறா மற்றும் மூவர்ண பலூனினை மாவட்ட ஆட்சியர் வானில் பறக்க விட்டு காவல்துறையின் அணி வகுப்பு மரியாதையினை பார்வையிட்டு ஏற்றுக் கொண்டார். பின்னர் 77 பயனாளிகளுக்கு ரூபாய் 3 இலட்சத்து 13 ஆயிரத்து 558 மதிப்பில் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிக்கு கைத்தறி ஆடை அணிவித்து கௌரவித்தார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு கிடைத்த நிதியினை பேராவூரணி அரசு பள்ளியில் கைப்பந்து விளையாட்டு மைதானம் சீரமைப்பதற்காக வழங்கிய பாக்கியலட்சுமிக்கு பாராட்டுச் சான்றிதழும், சிறப்பாக பணியாற்றிய 314 அரசு அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், காவல்துறை அலுவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கி கௌரவித்தார்.இவ்விழாவில் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன் டிஐஜி ரூபேஷ்குமார் மீனா, எஸ்பி தேஸ்முக் சேகர் சஞ்சய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.