தமிழக அரசின் அகரமுதலித்திட்ட இயக்ககம் சார்பில் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தூய தமிழ்ப்பற்றாளர் விருது மற்றும் ரூ 20 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது இது குறித்து அகரமுதலித்திட்ட இயக்கக இயக்குநர் காமராசு வெளியிட்டுள்ள செய்தியில் நடைமுறை வாழ்க்கையிலும் பேச்சு வழக்கிலும் பிறமொழி கலப்பில்லாமல் தூய தமிழிலேயே பேசுவோரை ஊக்கப்படுத்தும் வகையில் தூய தமிழ்பற்றாளர் விருது தமிழ் அகராதியியல் நாள் விழாவில் வழங்கப்படும் பரிசுத் தொகையை பெறுவதற்கு தகுதி வாய்ந்த தமிழ் பற்றாளர்கள் www.sorkuvai.com என்ற வலைதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து ஜன 29 ந் தேதிக்குள் agarathimalar2020@gmail.com என்ற இமெயில் முகவரி அல்லது இயக்குநர்,செந்தமிழ் சொற்பிறப்பியல், அகரமுதலித்திட்ட இயக்ககம், நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண் : 75 சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி நகர், சென்னை – 28 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும், தகுதி வாய்ந்தவர்கள் தொலைபேசி நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவர் என தெரிவித்துள்ளார்.