தஞ்சாவூரில் அகில இந்திய எல்ஐசி முகவர்கள் சங்கம் சார்பில் 13வது கிளை மாநாடு கிளை செயல் தலைவர் தேசிகன் தலைமையில் நடைபெற்றது,இக்கூட்டத்தில் நிர்வாகிகள் உஷாராணி வசுமதி பானுமதி வேளாங்கண்ணி காமராசு செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகவர்களுக்கு பென்சன் வழங்க வேண்டும் அனைத்து முகவர்கள் குடும்பத்தினருக்கும் மருத்துவக்காப்பீடு வழங்க வேண்டும்,குழுக் காப்பீடு ரூ 25 லட்சமாக வழங்க வேண்டும் முகவர்களுக்கு ரூ 21 ஆயிரம் மாத ஊதியம் வழங்க வேண்டும் முகவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும்,முன்மொழிவு படிவங்கள் மற்றும் பாலிசி பத்திரம் ஆகியவற்றை தமிழ் மொழியில் அச்சிட்டு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றினர் முன்னதாக கோட்ட அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் கோட்ட தலைவர் தங்கமணி மாநில செயலாளர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர் கிளைச் செயலாளர் புகழேந்தி பொருளாளர் ரமேஷ் செயல் அறிக்கை வாசித்தனர் ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார் முகவர் சரவணன் நன்றி தெரிவித்தார் இம்மாநாட்டில் முகவர்கள் கண்ணன் இளங்கோவன் அசோகன் சரபோஜி பிரதீபா பிரியா லதா பெரியார் செல்வி சூசைமேரி ஜாக்குலின்மேரி பத்மாவதி நடராஜமணி உள்ளிட்ட ஏராளமான முகவர்கள் கலந்து கொண்டனர்