தஞ்சாவூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

1749

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் ஆணைப்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் வெளியிட்டார் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 100079 பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 1055671 மூன்றாம் பாலினத்தவர் 168 என மொத்தம் 2056548 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர் தொகுதி வாரியாக திருவிடைமருதூர் 259074/கும்பகோணம் 272506/ பாபநாசம் 260339/திருவையாறு 267796/தஞ்சாவூர் 288900/ ஒரத்தநாடு 243014/ பட்டுக்கோட்டை 245258/ பேராவூரணி 219661 என ஆண் பெண் வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். எதிர்வரும் குடியரசு தினத்தன்று கிராமந்தோறும் நடைபெறும் சிறப்பு கிராமசபை கூட்டத்தில் பொது மக்களின் பார்வைக்காக இறுதி வாக்காளர் பட்டியல் வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்