இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி- தஞ்சாவூரில் IIFPT சாதனை.

2010

தஞ்சாவூரில் இந்திய உணவு பதன தொழில்நுட்பக்கழகம்(IIFPT) மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனம் ஆகும்,இங்கு உணவு பதப்படுத்துதல் சார்பான ஆராய்ச்சி மற்றும் கல்வி அளிப்பதோடு மட்டுமல்லாமல் விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர் உணவு பதப்படுத்துதல் சார்ந்த தொழில் மேற்கொள்வதற்கு பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாக செயற்கை செரிமான கருவி மூலம் உணவில் உள்ள சர்க்கரை கிரகித்தல் அளவை ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடித்துள்ளது,நாம் உண்ணும் உணவானது தொடர் இயக்க முறையினால் இரைப்பைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வயிற்றில் உயிர் வேதியியல் மற்றும் நொதிகளின் தொடர் அலை இயக்கத்தால் உணவு சிதைவு ஏற்படுகிறது,சிதைந்த உணவு குடலுக்கு கொண்டு அங்கு ஊட்டச்சத்து உறிஞ்சப்படுகிறது, இதனையடுத்து IIFPT நிறுவனத்தில் முதல்முறையாக செயற்கை மனித செரிமான கருவி உருவாக்கப்பட்டு அதன்மூலம் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது,அதன் ஒருபகுதியாக இந்த கருவி மூலம் உணவு செரிமானத்திற்கு பிறகு அதில் உள்ள சர்க்கரை கிரகித்தல் அளவை தெரிந்து கொள்ள முடிகிறது,இந்த தகவல்கள் நீரிழிவு நோயாளிகள் மற்றும் இருதய நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்நிறுவனத்தில் பல்வேறு உணவு பொருட்களின் கிளைசிமிக் குறியீடு(GI) கணக்கீட்டை ஆய்வுக்கூட சோதனை முறையில் செய்து வருவதால் ஆய்வு முடிவுகள் விரைவாகவும் துல்லியமாகவும் கிடைப்பதோடு மட்டுமல்லாமல் ஏற்புடைய கட்டணத்திற்கு செய்தும் தரப்படுகிறது.இது குறித்து இந்திய உணவு பதன தொழில்நுட்ப கழக இயக்குநர் முனைவர் அனந்தராமகிருஷ்ணன் கூறும்போது கடந்த 10 ஆண்டுகளாக செய்யப்பட்ட இந்த ஆராய்ச்சி மூலம் உணவு செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து கிரகித்தல் சார்ந்த புரிதலை இந்த கருவி மூலம் அறிந்து கொள்ள முடிகிறது, தற்போது கிளைசிமிக் குறியீடு சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன,ஆனால் IIFPT கண்டுபிடித்த இந்த செயற்கை செரிமான கருவி மூலம் ஆய்வு மேற்கொள்ள நமக்கு மனிதர்கள் மற்றும் விலங்குகளின் அவசியம் இல்லாததால் ஆய்வு முடிவுகள் துரிதமாக கிடைக்கின்றன,மேலும் இந்த தொழில்நுட்பம் ஆராய்ச்சியாளர்களுக்கும் மற்றும் தொழில்நிறுவனங்களுக்கும் தொழில் முனைவோர்களுக்கும் பேருதவியாக இருக்கும் என்று தெரிவித்தார்.