ரூ 3ஆயிரம் உதவித்தொகை பெறலாம்,விண்ணப்பங்கள் வரவேற்பு.

1099

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மத்திய அரசின் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் கயிறு வாரியத்தின் மண்டல விரிவாக்க மையம் தஞ்சாவூர் பிள்ளையார்பட்டியில் கயிறு பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம், கயிறு தொழில்நுட்பத்தில் டிப்ளமோ படிப்பு பயிற்சி வகுப்பில் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்ட ஆண், பெண் இருபாலரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பயிற்சிக்கு அடிப்படைத் தகுதி பிளஸ் 2 தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்,பயிற்சி காலம் 15 மாதங்கள்,பயிற்சியின்போது மாதம் ரூபாய் 3000 உதவித்தொகை வழங்கப்படும் பயிற்சி பெறுபவர்களுக்கு விடுதி வசதி செய்து தரப்படும். பயிற்சியில் சேருவதற்கான விண்ணப்ப படிவங்களை அலுவலக வேலை நாட்களில் நேரிலோ அல்லது கடிதம் மூலமாகவோ இலவசமாக பெற்றுக்கொள்ளலாம்,அல்லது www.coirboard.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் அலுவலகப் பொறுப்பாளர், மண்டல விரிவாக்க மையம், பிள்ளையார்பட்டி, வல்லம் வழி தஞ்சாவூர்-613403 என்ற முகவரியில் 20.01.2021க்குள் வந்து சேரவேண்டும் மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண்: 04362-264655 தொடர்பு கொள்ளவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

+ 86 = 89