தஞ்சாவூரில் புதுமை,மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய மயூரி யாழ் வடிவமைப்பு.

1799

தஞ்சாவூரில் மன்னர்கள் காலத்தில் பயன்படுத்திய யாழ்போன்று தற்போது புதுமையாக மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார் வீணை இசைக்கலைஞர் ராஜேந்திரன்,தஞ்சை என்றாலே உலகப்பிரசித்தி பெற்ற பெரியகோவிலுக்கு அடுத்தபடியாக தஞ்சாவூரில் செய்யப்படும் வீணை மிகவும் பிரசித்தி பெற்றது,அந்த வகையில் தஞ்சாவூரில் வீணை தயாரிப்பாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் மற்றும் தொழிலாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் வீணை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தஞ்சாவூரை சேர்ந்த வீணை தயாரிப்பாளர் ராஜேந்திரன் என்பவர் பரம்பரையாக வீணை தயாரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார், தான் செய்யப்படும் வீணைகளில் புதுமை படைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தற்போது மயூரி யாழ் செய்து புதுமை படைத்துள்ளார்,மயூரி யாழ் என்பது மன்னர்கள் காலத்தில் சுமார் 100வருடத்திற்கு முன்பு பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளில் ஒன்றாகும்,நாளடைவில் அந்த இசைக்கருவி மறைந்துவிட்ட நிலையில் தற்போது அந்த யாழ் இசைக்கருவியை மீட்டெடுக்கும் வகையில் புதியதாக மயூரி யாழ் செய்து அசத்தி உள்ளார்,யாழ் இசைக்கருவியில் மயில் போன்று உடல் அமைப்பையும் மயில் தோகையை வைத்தும் மயில் நின்று கொண்டு இருப்பது போலவும் சுரங்கள் அமைத்து யாழ் இசைப்பதற்கு ஏற்றவாறு வடிவமைத்துள்ளார்,இதுகுறித்து அவர் கூறும்போது வீணை தயாரிப்பில் புதுமையாக செய்ய வேண்டும் என்ற நோக்கில் தஞ்சாவூரில் உள்ள உலகப்பிரசித்தி பெற்ற சரஸ்வதி மஹால் நூலகத்தில் ஓலைச்சுவடிகளை பார்த்து யாழ் என்பது எப்படி இருக்கும் என்பதை தெரிந்து அதன்படி அன்னபட்சி பறவை போன்று மயில் மூக்கு வைத்து சுரங்கள் அமைத்து வாசிப்பதற்கு ஏற்றவாறு இதனை வடிவமைத்துள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

46 − 36 =