ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம்

1122

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஐம்பொன்னால் ஆன நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் பெருவுடையார் ஆலயம் ஆயிரம் ஆண்டுகளை கடந்து சிறந்து விளங்குகிறது.இது கட்டிட கலைக்கு எடுத்துகாட்டாய் விளங்குவதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கிவருகிறது. இத்தகைய புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலில் ஐம்பொன்னால் ஆன நடராஜர் தனிசன்னதியில் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்.மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று ஆண்டுதோறும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடைபெறும். அதைப்போல் இந்தாண்டு ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு செவ்வாய் இரவு நடராஜருக்கு விபூதி, பால், தயிர்,பழங்கள்,மஞ்சள், திரவிய பொடி,தேன்,இளநீர்,கரும்புச்சாறு, சந்தனம் உள்ளிட்ட 22 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமிக்கு மலர் அலங்காரம் செய்து மஹாதீபாரதனையும் காட்டப்பட்டது. முன்னதாக நடராஜர் சுவாமி வெண்பட்டு உடுத்தி தஞ்சை பெரிய கோவிலில் உள் பிரகாரத்தில் வலம் வந்தார் இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.