தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன், தஞ்சையில் தனியார் மண்டபத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுடன் உரையாடினார். அப்போது விவசாயிகளின் தேவைக்கேற்ப மானியம் வழங்க வேண்டும். மக்களின் பிரச்சினையை தீர்க்க இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கிராமசபை கூட்டம் நடத்தினோம். இக்கூட்டம் வெற்றிகரமாக இருந்ததால் மற்றவர்கள் எங்களை பார்த்து அது போல் நடத்தி வருகிறார்கள் என திமுகவை குற்றம் சாட்டினார். மேலும் நாங்கள் சோழர் காலத்து நீர்நிலைகளை சீரமைக்க வந்துள்ளோம் விளை நிலங்களை அழிக்கும் திட்டங்கள் கைவிடப்பட வேண்டும் மேலும் எம்ஜிஆர் நிறுவிய தமிழ் பல்கலை கழகத்தை ஊழலில் இருந்து மீட்டெடுப்போம். சரஸ்வதி மஹால் நூலகம் மொத்தமாக களவு போகும் முன்பு அதை மீட்க வேண்டும் என தெரிவித்தார். பின்னர் உலகத்திலேயே மிக எடை குறைவான செயற்கைக்கோளை உருவாக்கிய தஞ்சையை சேர்ந்த மாணவன் ரியாஸ்தீனுக்கு கமலஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.