விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி

1376

தஞ்சாவூரில் விபத்தால் மரணம் அடைந்த காவலர் குடும்பத்தினருக்கு சக காவல் நண்பர்கள் சார்பில் நிதி உதவி தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் 2013ம் ஆண்டில் பயிற்சி பெற்று பணியில் இருந்த மோசஸ் மோகன்ராஜ் என்ற காவலர் கடந்த ஆகஸ்ட் மாதம் விபத்தில் மரணமடைந்தார் இதனையடுத்து தமிழகம் முழுவதும் 2013ம் ஆண்டு காவலர் பயிற்சி பெற்ற மற்றும் அவருடன் பணிபுரிந்த காவல் நண்பர்கள் என ஒன்று சேர்ந்து நிதி திரட்டி மறைந்த மோசஸ் மோகன்ராஜ் குடும்பத்தினருக்கு ரூபாய் 8 லட்சத்து 15 ஆயிரம் அவரது குடும்பத்தினருக்கு வழங்கினர் முன்னதாக மறைந்த காவலர் மோசஸ் மோகன்ராஜ் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி மெளன அஞ்சலி செலுத்தினர் அப்போது சக காவலர்கள் பேசும்போது காவலர்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும் இதுபோன்று பாதிக்கப்படும் காவலர்களுக்கு நிதி உதவி அளிக்க காவலர்கள் முன்வர வேண்டும் என தெரிவித்தனர் இந்நிகழ்ச்சியில் தஞ்சை திருவாரூர் சென்னை புதுக்கோட்டை திருவள்ளூர் கரூர் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்