உலகிலேயே மிகவும் எடை குறைவான இரண்டு வகை சேட்டிலைட் தஞ்சை மாணவர் கண்டுபிடிப்பு

1251

தஞ்சையை அடுத்த கரந்தை பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவர் ரியாஸ்தீன் இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் மெக்கட்ரானிக்ஸ் படித்து வருகிறார் இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த I Doodle Learning நிறுவனம் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி கழகமான நாசா உடன் இணைந்து cubes in space என்ற புதிய கண்டு பிடிப்புகளுக்கான போட்டியை ஆண்டுதோறும் நடத்துகிறது அதன்படி இவர் 2019-20க்கான போட்டியில் கலந்து கொண்டு தேர்வாகியுள்ளார் இவர் கண்டுபிடித்த இந்த Femto சாட்டிலைட்களும் நாசாவில் இருந்து வரும் 2021ம் ஆண்டு விண்ணில் ஏவப்பட உள்ளது, 73 நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட இந்த கண்டுபிடிப்புக்கான போட்டிகளில் இரண்டு சாட்டிலைட்டுகளை வடிவமைத்து நாசாவிலிருந்து ஏவ இந்த மாணவர் தேர்வாகியுள்ளார் இந்த சாட்டிலைட்களுக்கு விஷன் சாட் V 1 மற்றும் V 2 என்று பெயரிடப்பட்டுள்ளது இந்த இரு சாட்டிலைட் 37mm உயரமுடையது மற்றும் 33 கிராம் எடையுடையது இந்த இரு சாட்டிலைட் உலகிலேயே மிகவும் எடை குறைவான பெம்டோ செயற்கைக் கோள்கள் ஆகும் இந்த இரு சேட்டிலைட் ஆனது பாலி எதரி இமைடு அல்டம் என சொல்லக்கூடிய தெர்மோ பிளாஸ்டிக்கை கொண்டு 3டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது இந்த இரு சாட்டிலைட்டுகளும் தொழில் நுட்பம் சோதனை செயற்கை கோள்கள் ஆகும் சாட்டிலைட் நோக்கமானது Atmospheric and space studies and microgravity material research ஆகும் இதில் 11 சென்சார்கள் உள்ளன அதன் மூலம் 17 parameter களை கண்டறிய முடியும் இவை இரண்டும் 2021ம் ஆண்டு ஜூன் மாதம் நாசாவில் சவுண்டிங் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளதாக மாணவர் ரியாஸ்தீன் தெரிவித்தார் மாணவருடன் அவரது பெற்றோர் சம்சுதீன் ஜகர்ஜான் பேகம் ஆகியோர் வந்திருந்து மகிழ்ச்சியை தெரிவித்து கொண்டனர்