எம்ஜிஆரை பற்றி பேச சீமானுக்கு தகுதி இல்லை அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேட்டி

1143

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது இவ்விழாவில் எம்பியும் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம் மற்றும் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு 139 பள்ளிகளுக்கு 774 சைக்கிள் வழங்கும் விழாவினை தொடங்கி வைத்தனர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வைத்திலிங்கம் சீமான் உணர்ச்சிவசப்பட்டு சத்தமாக பேசி தன்னை ஒரு தலைவராக நினைத்துக் கொள்ளக் கூடாது எம்ஜிஆரை பற்றி பேச சீமானுக்கு எந்த தகுதியும் கிடையாது சத்துணவு திட்டம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தற்போது மினி கிளினிக் பொங்கல் பரிசு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை முதல்வர் பழனிசாமி செயல்படுத்தி வருகிறார் இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சிறிய விஷயங்களை பெரிதாக்குகிறார்கள் அது பற்றி தங்களுக்கு கவலை இல்லை என்று தெரிவித்தார் இவ்விழாவில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திருஞானம் ஆவின் தலைவர் காந்தி நிக்கல்சன் வங்கி தலைவர் அறிவுடைநம்பி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்