தஞ்சாவூர் மாவட்டத்தில் கிராமசபை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பழநிமாணிக்கம் பங்கேற்பு

1077

அதிமுகவை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை முன்னிறுத்தி, 200 தொகுதிகளின் வெற்றி இலக்குடன், 16 ஆயிரம் ஊராட்சிகள் வார்டுகளில் நடைபெறும் கிராம/ வார்டு சபைக் கூட்டங்கள் டிசம்பர் 23 காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார் இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும் எம்பியுமான எஸ்.எஸ். பழநிமாணிக்கம் தலைமையில் மானோஜிபட்டி பூதலூர் ஒரத்தூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிமுகவை நிராகரிப்போம் என்பதை, பத்து முழக்கங்களை முன்வைத்து கிராமசபை கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில்
விவசாயிகளை வஞ்சித்த அதிமுகவை நிராகரிப்போம்
வேலையில்லாமல் திண்டாடவிட்ட அதிமுகவை நிராகரிப்போம்
தாகத்தில் தவிக்கவிட்ட அதிமுகவை நிராகரிப்போம் சட்டம் ஒழுங்கை சரி செய்யாத அதிமுகவை நிராகரிப்போம் கஜானாவைச் காலி செய்த அதிமுகவை நிராகரிப்போம்
கல்வியையும் சுகாதாரத்தையும் தரம் இழக்கச் செய்த அதிமுகவை நிராகரிப்போம்
பெண்களின் உரிமைகளைப் பறித்திட்ட அதிமுகவை நிராகரிப்போம்
சமூக நீதியைச் சிதைத்த அதிமுகவை நிராகரிப்போம்
தமிழர்களின் பெருமைகளைச் சீரழித்த அதிமுகவை நிராகரிப்போம்
ஆட்சி செய்ய தகுதியற்ற அதிமுகவை நிராகரிப்போம் என
இந்தப் பத்து முழக்கங்களையும் தெரிவித்து அதிமுகவை நிராகரிப்போம் என்று தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும் அங்கிருந்த பதாகையில் அதற்கான கையெழுத்தும் போடப்பட்டது இக்கூட்டத்தில் அப்பகுதியை சார்ந்த கட்சி நிர்வாகிகள் பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்