எல்ஐசி முகவர்களுக்கு ஓய்வூதியம் மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும் என்று எல்ஐசி முகவர்கள் கோரிக்கை

880

தஞ்சாவூரில் எல்ஐசி முகவர்கள் சார்பில் முகவர் சங்க(லிகாய்) 18 ம் ஆண்டு அமைப்பு தினம் எல்ஐசி கோட்ட அலுவலகம் சிஏபி கிளையில் கொண்டாடப்பட்டது செயல் தலைவர் தேசிகன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் லிகாய் சங்க கொடியினை செயற்குழு உறுப்பினர் பால்ராஜ் ஏற்றி வைத்தார் பின்னர் முகவர்கள் மற்றும் எல்ஐசி ஊழியர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர் முகவர்கள் அதிக பாலிசி கொடுத்து வணிக தினமாகவும் கொண்டாடி மகிழ்ந்து முகவர்களுக்கு ஓய்வூதியம் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் குழுக் காப்பீடு வரம்பை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன் வைத்தனர் இந்நிகழ்ச்சியில் கோட்ட தலைவர் தங்கமணி அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் மாநில செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ராஜேந்திரன் அசோகன் காமராஜ் புகழேந்தி ரமேஷ் வேளாங்கண்ணி உஷாராணி மற்றும் முகவர்கள் பானுமதி பிரதிபா பெரியார் செல்வி பிரியா லதா ஜாக்குலின் சூசைமேரி சரபோஜி சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

34 − 31 =