தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என பாஜக மாநில தலைவர் எல்.முருகன் பேட்டி.

1217

பாஜக கட்சி சார்பில் தஞ்சாவூரில் விவசாயிகள் நண்பன் மோடி விவசாயிகள் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் மற்றும் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசின் வேளாண்மை திருத்த சட்டத்தின் நன்மைகளை எடுத்துக் கூறினர் முன்னதாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த இணை அமைச்சர் வி.கே.சிங் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது காங்கிரஸ் இடதுசாரி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு விவசாயிகளிடையே பயத்தை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றும் புதிய வேளாண் சட்ட திருத்த மசோதாவிற்கு பெரும்பாலான விவசாயிகள் ஆதரவு அளித்து வருகிறார்கள் இந்த சட்டத்தினால் குறைந்தபட்ச ஆதார விலை என்பது பாதிக்கப்படாது என்று தெரிவித்தார் இதனைத்தொடர்ந்து விவசாயிகளுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தலைவர் முருகன் முதலமைச்சர் வேட்பாளர் பழனிச்சாமியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று நாங்கள் கூறவில்லை அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் அறிவித்துள்ளார்கள் ஆனால் எங்கள் தேசிய தலைமையும் பாராளுமன்ற குழுவும் அதை பரிசீலனை செய்து உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள் நாங்கள் எந்த இடத்திலும் முதல்வர் வேட்பாளர் பழனிச்சாமியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லவில்லை தேசிய ஜனநாயகக் கூட்டணி தற்போது வரை நீடிக்கிறது.தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி உள்ளார் என்று தெரிவித்து திமுக மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் கருப்பு முருகானந்தம் தேசியசபை உறுப்பினர் ராமலிங்கம் மாவட்ட தலைவர் பண்ணவயல் இளங்கோ மாவட்ட பொதுச் செயலாளர் ஜெய்சதிஷ் ஊடகப் பிரிவு துணை தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்