தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஒப்பந்தப் பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் COPA தொழிற் பிரிவில் காலியாகவுள்ள ஒப்பந்தப் பயிற்றுநர் பணியிடத்திற்கு மாதம் ரூ.10,000/- தொகுப்பூதியத்தில் கீழ்க்கண்ட தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது:01.07.2020 அன்று குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும். அதிகபட்சம் அரசு விதிகளின்படி இனம் வாரியாக வயது வரம்பில் தளர்வு உண்டு. இனசுழற்சி: பொதுசுழற்சி கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பொறியியல் கல்லூரி,பல்கலைக்கழகத்திலிருந்து கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம் இன்ஜினியரிங் பிரிவில் பட்டம் மற்றும் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது கணினி அறிவியல் /கணினி அப்ளிகேசன்/ தகவல்தொழில் நுட்பத்தில் முதுநிலை அல்லது NIELIT B Level மற்றும் ஓராண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது கணினி அறிவியல்/ கணினி அப்ளிகேசன் தகவல்தொழில் நுட்பப் பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் அல்லது அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் PGDCA பட்டம் அல்லது NIELIT A Level மற்றும் இரண்டாண்டு அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அல்லது இரண்டு ஆண்டு அனுபவத்துடன் அங்கீகரிக்கப்பட்ட கழகம்/ நிறுவனத்தில் இருந்து கணினிஅறிவியல்/ தகவல் தொழில்நுட்பத்தில் மூன்று ஆண்டு டிப்ளமோ முடித்திருக்கவேண்டும். அல்லது COPA பிரிவில் தேசிய தொழிற்பழகுநர் சான்றிதழ் அல்லது தேசிய தொழிற்சான்றிதழ் மற்றும் தேசிய கைவினைஞர் பயிற்றுநர் பயிற்சி குறித்த சான்றிதழ் மூன்றாண்டு முன் அனுபவத்துடன் இருக்கவேண்டும். தகுதியுடையோர் விண்ணப்பங்களை துணை இயக்குநர்/ முதல்வர்,அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், தஞ்சாவூர்-613007. என்ற முகவரிக்கு 28.12.2020 மாலை 5.45 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பவேண்டும். குறிப்பிட்ட தேதிக்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்களும் சரிவர பூர்த்தி செய்யப்படாத மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்