பி.இ மற்றும் டிப்ளமோ படித்த இளைஞர்களுக்கு வேலை ரெடி

1409

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த டிப்ளமோ மற்றும் பி.இ படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 15ந்தேதி தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது,இந்த தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் சென்னை,காஞ்சிபுரம் மற்றும் கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களிலிருந்து பிரபலமான எம்என்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு நேர்காணல் முறையில் பணிக்கு தேர்ந்தெடுக்கின்றனர்,இந்த பணிக்கு மாதம் ரூ 10,850 முதல் 15,050க்குள் ஊதியம் வழங்கப்படும்,மேலும் உணவு,போக்குவரத்து வசதி உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படுகிறது,இந்த நேர்காணலில் கலந்து கொள்வதால் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு பரிந்துரையில் எந்த பாதிப்பும் ஏற்படாது,மேலும் தொடர்புக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.