தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள் பயிர்காப்பீடு செய்ய கடைசி நாள் டிசம்பர் 15 மழை வெள்ள பாதிப்புகளை 1077 க்கு தெரிவிக்கலாம்

967


தஞ்சாவூர் வட்டத்தில் புரவி புயல் மழையினால் பாதிக்கப்பட்ட 238 நபர்களுக்கு ரூபாய் 15.33 லட்சம் நிவாரண உதவித் தொகையை மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம்
மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் முன்னிலையில் வழங்கினார்.தஞ்சாவூர் வட்டத்திற்குட்பட்ட சக்கரசாமந்தம் கிராமத்தில் புரவிப்புயல் மழையினால் வீடு சுவர் இடிந்து சம்பவ இடத்திலேயே இறந்தமையால், அவரது வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சரின் நிவாரண நிதி மற்றும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து 10 லட்ச ரூபாய் நிவாரண உதவி ஒதுக்கீடு செய்யப்பட்டு, முதற்கட்டமாக இருவருக்கும் பேரிடர் மேலாண்மை நிதியிலிருந்து தலா 2 லட்சத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், கால்நடை உயிரிழப்பு ஏற்பட்ட 3 நபர்களுக்கு ரூபாய் 85,000 நிவாரண உதவியும், குடிசை மற்றும் ஒட்டு வீடுகள் சேதமடைந்த 234 நபர்களுக்கு ரூபாய் 10.48 லட்சம் நிவாரண உதவித்தொகையினையும் எம்பி வழங்கினார். பின்னர் எம்பி வைத்திலிங்கம் பேசும் போது தஞ்சாவூர் மாவட்டத்தில் இந்தாண்டு நன்றாக மழை பெய்துள்ளது. மழைநீரில் பயிர்கள் மூழ்கியுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் புயல் மற்றும் மழையினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு, உடனுக்குடன் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் 90 சதவீதத்திற்கு மேல் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் டிசம்பர்-15 ஆம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். பொதுமக்கள் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் மேயர் சாவித்திரி கோபால் பால்வள தலைவர் காந்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.