தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையில் சமையலர் வேலைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன,தஞ்சாவூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு 32 சமையலர் பணியிடங்களை ரூ 15,700/-50,000 என்ற ஊதிய பிணைப்பில் ரூ 15,700/- ஊதியத்தில் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது,விண்ணப்பதாரர் கீழ்கண்ட தகுதிகள் பெற்று இருக்க வேண்டும்,விண்ணப்பதாரர் தமிழில் எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை தரப்படும், 18வயது முதல் 35வயதுவரை உள்ளவர்களாக இருக்க வேண்டும், தஞ்சாவூர் மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும், மேற்கண்ட தகுதிகள் இருப்பின் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ பதிவஞ்சல் மூலமாகவோ ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் வரும் டிசம்பர் 24க்குள் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.