ரேசன் கடைகளில் இலவச அரிசி பெறும் வகையில் சர்க்கரை கார்டு வைத்திருப்போர் அதை அரிசி கார்டாக மாற்ற வரும் 20ந்தேதி வரை தமிழக அரசால் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,தமிழகத்தில் 2.09 கோடி ரேசன் கார்டுகள் உள்ளன அதில் அரிசி,சர்க்கரை மற்றும் எந்த பொருளும் வாங்காத கார்டுகள் என உள்ளன,ரேசன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு இலவச அரிசி,கோதுமை உள்ளிட்ட அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன,சர்க்கரை கார்டுதாரர்களுக்கு அரிசி தவிர்த்து மற்ற பொருட்கள் வழங்கப்படுகிறது, மேலும் அரிசி கார்டுதாரர்களுக்கு அரசின் இலவச திட்டங்கள் மட்டுமின்றி 1000ரூ பணம் பொங்கல் பரிசுதொகுப்பு மற்றும் கொரனோ காலத்தில் நிவாரணத்தொகை ரூ1000 வழங்கப்பட்டது, இதனால் சர்க்கரைகார்டுதாரர்கள் அரிசிவகைக்கு தங்களையும் மாற்றம் செய்யுமாறு கோரிக்கை வைத்தனர்,இதனையடுத்து அரிசிவகைக்கு மாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது, இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அளித்த அறிக்கையில் சர்க்கரை கார்டுதாரர்கள் தங்களின் கார்டை அரிசி கார்டாக மாற்றம் செய்ய விரும்பினால் விண்ணப்பத்துடன் தங்களின் ரேசன் கார்டு நகலை இணைத்து வரும் 20ந்தேதி வரை www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியிலும் சம்பந்தப்பட்ட வட்டவழங்கல் அலுவலகத்திலும் சமர்ப்பிக்கலாம், தகுதியின் அடிப்படையில் அரிசி கார்டாக மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.