தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேஷன் கடந்த பல வருடங்களாக ஏழை எளிய மக்களுக்கு கல்வி உதவித் தொகை மற்றும் மருத்துவ சேவையை வழங்கி வருகிறது கொரனோ மற்றும் பேரிடர் காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் பசியை போக்க தினமும் 500 நபர்களுக்கு இலவசமாக உணவு வழங்கி வருகிறது. இந்நிலையில் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மதர்தெரசா பவுண்டேஷன் சார்பில் மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது அதில் 40க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ராஜேஸ்வரி கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்வில் எப்படி சிறப்பாக வாழ வேண்டும் என அறிவுரைகளை எடுத்து கூறி மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர மிதிவண்டி, ஊன்றுகோல் மற்றும் தொழில் முனைவோர்களுக்கு தையல் மெஷின் மற்றும் திருநங்கைக்கு சுய தொழில் செய்ய மூன்று சக்கர தள்ளுவண்டி ஆகியவற்றையும் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பவுண்டேஷன் தலைவர் சவரிமுத்து தலைமையில் அறங்காவலர்கள் கோவிந்தராஜ் சம்பத் ராகவன் முரளிகிருஷ்ணன் மற்றும் திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார் மெர்சி ஜெரோம் நாகராணி வைஷ்ணவி விஜி ஆகியோர் கலந்து கொண்டனர்