தமிழகத்தில் வரும் 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சி சார்பில் தேர்தல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது,இதனையடுத்து அதிமுக கட்சி சார்பில் தஞ்சாவூரில் இளைஞர்,இளம்பெண்கள் பாசறை,பூத் மகளிர் குழு அமைக்கும் பணி தொடங்கப்பட்டது,முன்னாள் எம்பி பரசுராமன் தலைமையில் முன்னாள் மேயர் சாவித்திரிகோபால் மற்றும் பகுதி செயலாளர் மெடிக்கல் சரவணன்,ரமேஷ்,சண்முகபிரபு,கரந்தை பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் வார்டு வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசித்தும் பூத் மகளிர் குழு விண்ணப்பங்களை வழங்கியும், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கட்சி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும், அதற்கு கட்சி நிர்வாகிகள்,மகளிர் குழுவினர், தொண்டர்கள் முழு ஒத்துழைப்பு அளித்து தமிழக அரசின் சாதனைகளை மக்களுக்கு வீடு வீடாக கொண்டு செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதைப்போல் அதிமுக நிர்வாகிகள் காந்தி, துரை.திருஞானம், அறிவுடைநம்பி, புண்ணியமூர்த்தி ஆகியோர் தலைமையில் பகுதி வாரியாக பூத் மகளிர் குழு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.