மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

1171

தஞ்சாவூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது மாநிலத் தலைவர் சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் இடைநிலை சாதாரண நிலை ஆசிரியர்களுக்கு வழங்கிட வேண்டும் புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படவேண்டும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் தொடர்ந்து வழங்கிட வேண்டும் வயது உச்ச வரம்பின்றி ஆசிரியர் பணி நியமனங்கள் நடைபெறவேண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி சான்று வாழ்நாள் தகுதி சான்றாக வழங்கிட வேண்டும் புதிய கல்வி கொள்கை திட்டத்தை தமிழக அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் ஆசிரியர் அரசு ஊழியர் ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய வேண்டும் தாய்மொழியில் கல்வி பயின்றோருக்கு தமிழக அரசு பணிகளில் முன்னுரிமை வழங்க வேண்டும் தமிழ்நாட்டின் கல்வி பயிற்று மொழியாக ஆட்சி அலுவல் மொழியாக வழக்காடுமன்ற மொழியாக வழிபாட்டு மொழியாக தமிழ்மொழி முன்னிலைப்படுத்த வேண்டும் மத்திய மாநில அரசுகளின் பொதுப் பட்டியலில் இருந்து கல்வி மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர் இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் கிட்டு மாநில துணைத் தலைவர் நெல்சன் மாநிலச் செயலாளர் முருக செல்வராஜன் மாநில கொள்கை விளக்க செயலாளர் மோகன் மாநில தலைமை நிலைய செயலாளர் ரமேஷ் மாநில வெளியீட்டு செயலாளர் மணிவாசகம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்