தஞ்சாவூர் மாவட்டம் நெல் கொள்முதலில் அபார சாதனை
ஜூன் 12ஆம் தேதி மேட்டூர்அணை நீர் திறக்கப்பட்டதாலும்,குடிமராமத்து திட்டத்தின் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரி,குளங்கள், வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டதாலும் 2020-2021 ஆம் பருவம் குறுவை நெல் சாகுபடிக்கு நெல் சாகுபடி இலக்கு பரப்பளவு 43 ஆயிரத்து 225 ஹெக்டேரை விட 58 ஆயிரத்து 948 ஹெக்டர் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.இது இலக்கைவிட 36 சதவீதம் அதிகமாகும்.மேலும் எதிர்பார்க்கப்பட்ட மகசூல் அளவு 6 மெட்ரிக்டன்/ஹெக்டர் ஆனால் 6.2 மெட்ரிக்டன்/ஹெக்டர் கூடுதல் மகசூல் இப்பருவத்தில் கிடைத்துள்ளது, இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 3.65 இலட்சம் மெட்ரிக் டன் நெல் மகசூல் கிடைக்கப்பெற்றுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2019-2020 காரீப் கொள்முதல் பருவகடைசிப் பகுதியில்; 1.87 இலட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு மீதம் 1.78 இலட்சம் மெட்ரிக் டன் எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை நவம்பர் 19 வரை 300 நேரடிநெல் கொள்முதல் நிலையங்கள் வரை திறக்கப்பட்டு 1,66,521 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டதில் 35,527 விவசாயிகள் ரூ 323 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பெற்று பயனடைந்துள்ளனர் என மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்,இதனால் 2020-2021 குறுவை நெல் கொள்முதலில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அபார சாதனை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்தின் மூலம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது