தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கார்த்திகை தீப திருவிழா விளக்குகள் கண்காட்சி

1518

தஞ்சாவூர் பூம்புகார் விற்பனை நிலையத்தில் கைவினைக் கலைஞர்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கத்தில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு பாரம்பரிய பித்தளை விளக்குகள் சிறப்பு கண்காட்சி நடைபெற்று வருகிறது விளக்குகள் ஒவ்வொருவருடைய இல்லத்திலும் இன்றியமையாத பொருளாக அமைந்துள்ளது நல்ல நிகழ்ச்சிகள் பண்டிகைகள் விழாக்கள் போன்ற எந்த ஒரு செயலுக்கும் நல்லதொரு தொடக்கமாக விளக்கேற்றி துவக்கி வைக்கின்றோம் ஆன்மீக வழிபாட்டில் முக்கிய இடம்பிடித்துள்ள விளக்குகள் வீட்டில் லட்சுமிகரமான பொருளாக கருதப்படுகிறது இதனையடுத்து கார்த்திகைதீபத் திருவிழா வரும் ஞாயிறன்று நடைபெறுவதை முன்னிட்டு பாரம்பரிய பித்தளை விளக்கு கண்காட்சி மற்றும் விற்பனை தஞ்சை பூம்புகார் விற்பனை மையத்தில் நடைபெற்று வருகிறது இக்கண்காட்சியில் ஏகஜோதி விளக்குகள் ஐந்து முக விளக்குகள் குத்துவிளக்குகள் அகல் விளக்குகள் லட்சுமி கணேஷ் பாலாஜி முதலிய உருவங்களைக் கொண்ட காமாட்சி விளக்குகள் தொங்கு விளக்குகள் தூண்டா விளக்குகள் வாசமாலை கிளை விளக்குகள் மற்றும் கிளி தொங்கு விளக்குகள் ரத தீபம் அடுக்கு தீபங்கள் அஷ்டோத்திர விளக்குகள் கேரள மலபார் விளக்குகள் விநாயகர் லட்சுமி சரஸ்வதி பொருத்தப்பட்ட அலங்கார குத்துவிளக்குகள் நவகிரக விளக்குகள் அஷ்டலட்சுமி விளக்குகள் என கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன கண்காட்சியில் சிறப்பு அம்சமாக தாமரை பஞ்சமுக விளக்கும் மற்றும் பித்தளை விளக்குகளும் தமிழ்நாட்டில் பல ஊர்களில் இருந்து கொண்டு வரப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது என்றும் இக்கண்காட்சியில் விற்பனை செய்யப்படும் அனைத்து விளக்குகளுக்கும் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றும் இக்கண்காட்சி மற்றும் விற்பனை வரும் 5ம் தேதி வரை நடைபெறுகிறது என பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் அருண் தெரிவித்தார்