அம்மா இருசக்கர வாகனத்திட்டம் விண்ணப்பிக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அழைப்பு

4276

தஞ்சாவூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனதிட்டத்தின் கீழ் உழைக்கும் மகளிர்க்கு 50சதவீத மானியத்தில் இருசக்கர வாகனம் வாங்க விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் அழைப்பு.
பெண்கள் தங்களது பணியிடங்களுக்கு செல்வதற்கும் மகளிர் பிற வேலைகளுக்கும் எளிதில் செல்லும் வகையில் இருசக்கரவாகனங்கள் வாங்க 50 சதவீத மானியம் வழங்கும்; ஒருமுன்னோடி திட்டம் அம்மா இரு சக்கரவாகனத் திட்டம் ஆகும்,இத்திட்டத்தின் மூலம் சமுதாய அமைப்புகள்,வணிக நிறுவனங்கள்,அரசு உதவிபெறும் அமைப்புகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சுயதொழில் புரிவோர் தினக்கூலி தொகுப்பு ஊதியம் ஒப்பந்த ஊதியம் அடிப்படையில் பணிபுரியும் மகளிர் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் அங்கன்;வாடி பணியாளர்கள். உதவியாளர்கள். சத்துணவு அமைப்பாளர்கள். சமையலர். சமையல் உதவியாளர். கடைகளில் பணிபுரியும் மகளிர் ஆகியோர் ஆண்டு வருமானம் ரூ 2.50 இலட்சத்திற்கு மிகாமல் ஓட்டுநர் உரிமம் உள்ள 18 முதல் 45 வயது வரையிலான மகளிர் இத்திட்டத்தில் விதிகளுக்கு உட்பட்டு பயன்பெறலாம், இத்திட்டத்தின்கீழ் தினசரிநீண்ட தூரம் பயணிக்ககூடிய மகளிருக்கு தேவையின் அழப்படையில் 125 சிசிக்கு மிகாத திறன் கொண்டு ஆட்டோ கியர் தயாரிக்கப்பட்ட இரு சக்கரவாகனம் வாங்கிகொள்ள அதிகபட்சமாகமானியம் ரூ 25ஆயிரம் அல்லது வாகனவிலையில் 50 சதவீதம் இவ்விரண்டில் எது குறைவோ அந்த தொகை மானியமாக வழங்கப்படும், மகளிர் மாற்றுத்திறனாளி மூன்று சக்கரம் பொருத்திய வாகனம் வாங்கி கொள்ளலாம், மாற்றுத்திறனாளிகளுக்கான மூன்று சக்கர வாகன மானியம் ரூ 31,250ஆகும், தகுதியுள்ள மகளிர் உரிய விண்ணப்பங்களை அவரவர் பகுதிகளுக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலோ, நகராட்சி,மாநகராட்சி அலுவலகங்களிலோ,மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களிலோ இலவசமாக பெற்று பயன்பெறலாம்,உரிய தகுதிகள் கொண்ட மகளிர் விண்ணப்பித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.