நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்த தஞ்சை மாவட்ட ஆட்சியர்

1524


தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டைவட்டத்தில் பட்டுக்கோட்டை மதுக்கூர் பெரியக்கோட்டை கண்ணனாறு வடிகால் கரைகள் பலப்படுத்தும் பணி நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்து தேவையான அளவு மணல் மூட்டைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள பொதுப்பணித்துறை அலுவலர்களை அறிவுறுத்தினார்.தொடர்ந்து சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நிவாரணமுகாம் அமைக்கப்பட்டு வருவதை பார்வையிட்டு அங்கு பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்திடுமாறு அலுவலர்களை அறிவுறுத்தினார்.அதனைத் தொடர்ந்து, தம்பிக்கோட்டை வடகாடு பகுதியில் நசுவினியாறு மற்றும் பாட்டுவனாச்சி ஆறு முகத்துவாரம் பகுதியில் சுமார் மூன்றுகிலோமீட்டர் தூரம் நடந்தே சென்று நேரில் பார்வையிட்ட மாவட்டஆட்சியர் முகத்துவாரம் பகுதியில் எவ்வித தடையுமின்றி தண்ணீர் சென்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார், பின்னர், ராஜாமடம் அக்னியாறு முகத்துவாரத்தில் மணல் திட்டுகளை உடனடியாக அகற்றிடுமாறு உத்தரவிட்டார், பின்னர் ராஜாமடம் கீழத்தோட்டம் பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தை ஆய்வு செய்து பொதுமக்களை தங்க வைப்பதற்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்,இந்த ஆய்வின்போது பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி.சேகர்,மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி,சார் ஆட்சியர் பாலச்சந்தர் மற்றும் பொதுப்பணித்துறைத்துறை அலுவலர்கள் முருகேசன்,கனிமொழி ஆகியோர் உடன் இருந்தனர்.