தமிழகத்தில் நிவர் புயல் வானிலை மையம் எச்சரிக்கை

1469

வங்கக் கடலில் 24 மணி நேரத்தில் நிவர் புயல் உருவாகும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 740 கி.மீ மையம் கொண்டிருக்கும் புயலுக்கு நிவர் என்று பெயரிடப்பட்டுள்ளது இப்புயல் வரும் 25-ஆம் தேதி மாமல்லபுரத்திற்கும் காரைக்காலுக்கும் இடையே கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது புயல் கரையை கடக்கும் நேரத்தில் மணிக்கு 55 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசும் இந்தப் புயல் காரணமாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்த புயல் காரணமாக 24-ம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் காரைக்கால், நாகப்பட்டினம், கடலூர், அரியலூர், பெரம்பலூர் பகுதிகளில் மிக அதிக கனமழை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது